தமிழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கை: விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்வு இன்று நடக்கிறது

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்தவர்களுக்கு 22-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது. விளையாட்டுப் பிரிவின் கீழ் ஏறத்தாழ 500 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு 1,807 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர் களுக்கு நேற்று முன்தினம் (புதன் கிழமை) சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நிலையில், விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணைய தளத்தில் நேற்று வெளியிட் டது. அவர்களுக்கான கலந் தாய்வு இன்று (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந் தாய்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

SCROLL FOR NEXT