தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற, பாஜக மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றுக் கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. இமயம் முதல் குமரி வரை, மோடி என்ற குரல்தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுக்க உள்ளனர். அப்போது, பாஜகதான் மாற்றாக இருக்கும் என்றார்.