தமிழகம்

அப்போலோ மருத்துவமனையில் ஓய்வில் இருந்தபடியே அரசு, கட்சிப் பணிகளை முதல்வர் கவனிக்கிறார்: ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் ஓய்வில் இருந்தவாறே அரசு மற்றும் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலி தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்து பார்த்ததில், அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையால் காய்ச்சல் குண மானது. வழக்கமான உணவு களையும் உட்கொள்ளத் தொடங் கினார்.

டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி பூரணநலம் பெறுவதற்காக மருத்துவமனையில் முதல்வர் ஓய்வு எடுத்து வருகிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஓய்வின்போதே அரசு மற்றும் கட்சிப் பணிகளையும் கவனித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் காய்ச்சல் வராமல் இருக்கத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் அவ்வப்போது டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உடல்நிலை நன்கு குணமடைந்துள்ள நிலையில், முதல்வர் இன்னும் ஓரிரு நாட் களில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகி யுள்ளன.

சிகிச்சைக்காக அவர் வெளி நாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஏற்கெனவே தெரிவித்தது குறிப் பிடத்தக்கது.

போலீஸார் எச்சரிக்கை

‘முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகஊடகங் கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT