தமிழகம்

காவிரி போராட்டத்தில் பங்கேற்க ரஜினி தயாரா? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி

செய்திப்பிரிவு

மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:

காவிரி தண்ணீரை தர மறுத்த தால் இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ரஜினி பேசியிருக்கிறாரா? உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு காவிரியில் தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டபோது, தமிழர்கள் மீதும், அவர்களது தொழில் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வாகனங்கள், உடமைகளை தீயிட்டு கொளுத்தியபோதும், ரஜினி வாய் திறக்கவில்லையே ஏன். காவிரி உரிமை கேட்டு 4 ஆண்டு காலமாக தமிழகம் போராட்டக் களமாகவே மாறியுள்ளதே, அந்தப் போராட்டங்களில் ரஜினிகாந்த் பங்கெடுத்தது உண்டா?

உங்களை வாழவைத்த தமிழ் மக்கள் மீது உங்களுக்கு விசுவாசம், நன்றி உணர்வு இருக்குமானால் ஜூன் 1 முதல் 5 வரை தஞ்சாவூரில் நடைபெறவுள்ள விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க தயாரா என்றார்.

SCROLL FOR NEXT