தமிழகம்

8 நகரங்களில் வெயில் சதம்

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் கன்னியாகுமரி இடையே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மேகக்கூட்டங்கள் உருவாகி, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்ற மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, கடலூர் மற்றும் மதுரையில் தலா 102.2, திருச்சியில் 102.02, சென்னையில் 101.84, புதுச்சேரியில் 101.3, நாகப்பட்டினத்தில் 101.12, பரங்கிப்பேட்டையில் 100.94, திருத்தணியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT