காவல் துறையில் உள்ள 15,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. சுமார் 5 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 13,137 இரண் டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவ லர்கள், 1,512 தீயணைப்போர் பத விக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த ஜனவரி 23-ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந் தனர். இதில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இந்தத் தேர்வுக்காக முதல்முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலின பிரிவில் விண்ணப்பிக்க அனு மதிக்கப்பட்டிருந்தனர்.
காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழு வதும் 410 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 முதல் 11.20 மணி வரை தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதியுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதில், சுமார் ஒரு லட்சம் பெண்களும் அடங்குவர். திருநங்கைகளும் தேர்வை ஆர்வமுடன் எழுதியுள்ளனர்.
சென்னையைப் பொறுத்த வரை 56 மையங்களில் தேர்வு நடந் தது. சுமார் 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த எழுத்துத் தேர்வை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் அபய்குமார் சிங், துணை ஆணையர் ராதிகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.