தமிழகம்

வறட்சியால் விவசாயிகள் உயிரிழக்கவில்லை: முதல்வர் பழனிசாமி தகவல்- மனிதாபிமான அடிப்படையில் 65 பேருக்கு நிவாரணம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் இறக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் முதல்வரின் பொது நிதியில் இருந்து 65 பேருக்கு நிவாரணம் வழங்கப் பட்டது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை யைத் தீர்க்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிக்காக ரூ.100 கோடி, மதகு, கால்வாய் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1519 ஏரி, குளங்கள் தூர் எடுக்கும் பணி செயல்படுத் தப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் நன்செய் நிலமாக இருந்தால் ஓர் ஏக்கர் நிலத்துக்கு 30 யூனிட் வண்டல் மண்ணும், புன்செய் நிலமாக இருந்தால் 25 யூனிட் வண்டல் மண் எடுக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது. 33 சத வீதத்துக்கு மேல் மகசூல் இல்லாத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகி றது. மகசூல் பாதித்து நிவாரணத் தொகை பெறாமல் உள்ளவர் களும், விடுபட்டவர்களும், வட்டாட் சியர் அலுவலகத்தில் விண்ணப் பித்து நிவாரண நிதி பெறலாம்.

தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது. மின் பழுது காரணமாக மின் தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனரா, இறந்தனரா என ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இதில் விவசாய நிலமே இல்லாதவர்கள்கூட வறட்சியால் இறந்ததாக செய்தி வெளியாகிறது. அவர்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும்? தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் இறந்த 65 பேருக்கு மனிதாபிமான அடிப் படையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை.

வைகை, தாமிரபரணி உட்பட 5 ஆறுகளை தூர்வார வாப்காஸ் தனியார் நிறு வனம் விரிவான முழு திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு, ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் விரை வில் கைது செய்யப்படுவர்.

கோப்புகள் தேக்கம்

கடந்த 2 ஆண்டுகளாக கோப்பு கள் தேங்கியிருந்தன. நான் முதல் வராக பொறுப்பேற்ற 70 நாட் களில் 1560 கோப்புகளில் கையெ ழுத்திட்டு, ஏழை, எளிய மக்கள் பயன் பெற நடவடிக்கை எடுத்துள் ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT