தமிழகம்

வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் கடல் பகுதியில் இருந்து 750 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, வட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறினார்.

SCROLL FOR NEXT