தமிழகம்

நெடுவாசல் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: கனிமொழி உறுதி

செய்திப்பிரிவு

திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தின் முக்கிய பிரச்சினை களான நெடுவாசல் போராட்டம், குடிநீர் பிரச்சினை, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன் றத்தில் குரல் எழுப்புவோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அரசு, நிச்சயம் அதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேபோல, காஸ் சிலிண்டர் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினை என்பதால், அந்த விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT