இலங்கையில் படகுகள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட 18 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாத புரம் மாவட்ட மீனவர்கள் பாக். வளைகுடாவில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது மீனவர்களின் படகுகள் நீண்ட காலத்துக்கு இலங்கையில் முடக்கி வைக்கப்படுகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 80 படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் இடைவிடாத முயற்சியால், தமிழக மீனவர்களின் 80 படகுகளும் விடுவிக்கப்பட்டன. இவற்றில் பகுதியளவு சேதமடைந்த 64 படகுகள் மீட்புக் குழுக்களால் பழுது நீக்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன. மீட்பு பணிக்குச் சென்ற படகுகள் மற்றும் மீட்கப்பட்ட படகுகளுக்கு தேவையான எரி மற்றம் உயவு எண்ணெய்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுவில் சென்ற மீனவர் களுக்கான உணவு மற்றும் பழுது நீக்க செலவினம் ஆகியவற்றை தமிழக அரசே ஏற்றது. இலங் கையின் தலைமன்னார், காங்கேசன் துறை பகுதியில் இருந்த 18 படகுகள் முற்றிலுமாக சேதடைந்து இலங்கை கடற்பரப்பில் மூழ்கிவிட்டன.
இவ்வாறாக மூழ்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 18 படகுகளை இழந்த 18 மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டது. அவர்கள் துன்பத்தைப் போக்கும் வகையில், அவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.90 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்தில் பாதிக்கப்பட்ட 18 மீனவக் குடும்பங்களுக்கு முதல்வர் நேரில் காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.மணிகண்டன், அன்வர் ராஜா எம்பி., தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், மீன்வளத்துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆணையர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
ராணுவ வீரர் குடும்பத்துக்கு...
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணியின்போது ராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில், வாகனத்தை ஓட்டிச்சென்ற இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் ரெஜி மென்ட்டைச் சேர்ந்த தமிழக வீரர் முத்து சந்தனகுமார் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு நான் துயரமடைந்தேன். அவரது குடும் பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ராணுவ வீரர் முத்து சந்தன குமார் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என்றார்.