தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாடகை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார்.
கோவில்பட்டியில் அவர் கூறியதாவது:
ரகசிய வாக்கெடுப்பு இதுவரை எந்த சட்டப் பேரவையிலும் நடந்ததில்லை. ஆனால், கோரிக்கை வைப்பது உறுப்பினர்களின் விருப்பம். எல்லா தரப்பை சேர்ந்தவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சட்டப்பேரவையில் இரு தரப்பினரும் செய்த தவறு தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளது. இரு திராவிட கட்சிகளின் நடைமுறைகளை பார்த்து மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துவிட்டனர். தற்போதைய முதல்வர் அமர்ந்திருப்பது ஒரு வாடகை நாற்காலி போன்றது. அது நிரந்தரம் அல்ல. இந்த ஆட்சி நீடித்திருக்க வேண்டும். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால்,தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.