தமிழகம்

பெருங்களத்தூரில் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மூடியதைக் கண்டித்து மறியல்

செய்திப்பிரிவு

பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை போலீஸார் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஜி.எஸ்.டி சாலையில் பெருங் களத்தூரில் தினமும் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப் படுத்த போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலை யம் ஜி.எஸ்.டி சாலையில் போக்கு வரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலையை நேற்று முன்தினம் அடைத்தனர். இதனால் பெருங் களத்தூர், பீர்க்கன்காரணை, ஆலப்பாக்கம், சதானந்தபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இரண்டு சக்கர வாகனம் உட்பட லகுரக வாகனம் செல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை போலீஸார் ஏற்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் லகுரக வாகனம் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT