தமிழகம்

கல்குவாரி குட்டையில் மூழ்கி பொறியியல் மாணவர் பலி

செய்திப்பிரிவு

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (19) செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.

இவரும் இவரது 3 நண்பர்களும் மேட வாக்கம் அருகேயுள்ள ஒட்டியம் பாக்கம் கல்குவாரி குட்டையில் நேற்று முன் தினம் மாலை குளித்து விளையாடினர்.

பின்னர் ஒவ்வொருவராக குட்டையை விட்டு, வெளியேறினர். ஆனால் நீண்ட நேரமாகியும் சுதர்சன் குட்டையை விட்டு வெளியே வர வில்லை. அவரது துணிகள் மட்டும் மேலே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள், குட்டையில் சுதர் சனைத் தேடிப் பார்த்தனர். அங்கு அவரைக் காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உதவி கேட்டு சத்தம் போட்டனர். அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து, குட்டையில் இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் சுதர்சனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி நேற்று காலை உடலை மீட்டனர். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT