கல்லக்குடி அருகே உள்ள கல்லகம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, லாரி ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் வடுகர்பேட்டை பகுதியில் தனியார் ஐடிஐ-யின் பின்புறம் இறந்துகிடந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணை யில், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தியை காதல் திருமணம் செய்தது தொடர்பான பிரச்சினை யில் இளையராஜா கொலை செய் யப்பட்டது தெரியவந்தது. இதை யடுத்து, ஆனந்தியின் அண்ணன் அருண்குமார், அவரது நண்பர்கள் ராஜா, ஜீவா, வினோத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீ ஸார், 4 பேரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே, ஆனந்தியின் அண்ணன் அருண்குமார், அவரது நண்பர் வினோத் ஆகியோரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: இளையராஜாவும் ஆனந்தி யும் வெவ்வேறு சமூகத்தினர். இளையராஜாவுடன் கடந்த 21-ம் தேதி ஆனந்தி ஊரைவிட்டு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மாலை மால்வாய் பிரிவு சாலை அருகே நின்றுகொண்டிருந்த ஆனந்தியை அவரது குடும்பத்தினர் மீட்டு விசாரித்தபோதுதான், இளையராஜாவுடன் வெளியூருக் குச் சென்று, கோயிலில் அவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. ஆனந்தியின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தனர். அதன்பின் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரும் சேர்ந்து முறைப்படி திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை பார்த்த ஆனந்தியின் அண்ணன் அருண் குமார் சொந்த ஊருக்கு வந்துள் ளார். கடந்த மே 30-ம் தேதி இரவு இளையராஜாவை வரவழைத்து, தன் நண்பர்கள் 3 பேர் உதவியுடன் பீர் பாட்டிலால் தாக்கியும், கல்லைத் தூக்கிப் போட்டும் கொலை செய்துள்ளார். மேலும் 2 பேரைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.