உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 23 காவல் துறையினரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயல லிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை சேலையூர் காவல் நிலைய உதவி ஆணையர் கே.கே.முருகேசன், புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சி.சவரிமுத்து, கோவை சாய்பாபா காலனி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.கோபால் சாமி, சேலம் மாநகர அரசு மருத் துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே.கணேசன், திரு நெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வா ளர் துரைபாண்டியன், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் குமாரி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஏ.சிவசுப் பிரமணியன், திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு காவல் நிலைய தலைமைக் காவலர் ஏ.கே.சீனிவாசன், கோவை குனியமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் குமரன், சென்னை அசோக் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் இ. கிளாரன்ஸ் ஜெயகரன், அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பொய்யாமொழி, திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முக மதுகான், விழுப்புரம் மாவட்டம் பகண்டை கூட்டுச் சாலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வா ளர் பி.சங்கர், நாகை மாவட்டம் புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கே. சிவக்குமார், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஜே.வைத் தியநாதன், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை காவலர் பி.சிவசங்கர், சேலம் இரும்பாலை காவல் நிலைய காவலர் ஜி.ராஜா, சென்னை மாதவரம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் டி.மகாலிங்கம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன்,
தருமபுரி மாவட்டம் பாலக் கோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் என்.முத்துலிங் கம், சேலம் சூரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆர். சாம்பசிவம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல் நிலைய முதல்நிலை காவலர் என்.ராஜேந்தி ரன், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ஜெயக்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந் தனர் என்ற செய்தியறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இவர்கள் 23 நபர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள் கிறேன். அவர்களின் குடும்பங் களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெய லலிதா கூறியுள்ளார்.