தமிழகம்

ஜெர்மன் பெண் கூட்டு பலாத்கார சம்பவம்: மாதிரி புகைப்படத்துடன் தேடுதல் வேட்டை - போலீஸ் விசாரணையால் குப்பத்து பெண்கள் அதிருப்தி

செய்திப்பிரிவு

சூளேரிக்காடு கடற்கரையில் வெளி நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்ற வாளியின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடற்கரையோர மீனவக் குப்பங் களில் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே போலீஸாரின் விசார ணையால் கடும் மனஉளைச்சலில் தவிப்பதாக குப்பத்து பெண்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங் களைக் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன்படி, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்தார். இவர், சூளேரிக் காடு கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் அளித்த புகாரின்பேரில், மாவட்ட எஸ்பி சந்தோஷ் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப் படைகளை அமைத்தார். தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் மாதிரி புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாதிரி புகைப் படத்தில் உள்ள அடையாளங்களை வைத்து கடற்கரையோர குப்பங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் நேரில் சென்று விசாரணை மேற் கொண்டுள்ளனர். மேலும், சந்தேகப்படும் வகையில் இருந்த 11 நபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுதவிர சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனால், விரைவில் குற்றவாளி பிடிபடு வான் என போலீஸார் தெரிவிக் கின்றனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல் வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப் படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகை யில் சில நாட்கள் தங்கியிருக் கும்படி போலீஸார் கேட்டுக்கொண் டுள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெண்கள் அதிருப்தி

இதனிடையே மாதிரி புகைப் படத்தில் உள்ள அடையாளங்களை வைத்து பட்டிபுலம், புது எடையூர் குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள், குப்பங்களில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். இதில், மீனவர்கள் சிலரை சந்தேகப்படும் அடையாளங்கள் உள்ளதாகக் கூறி நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசா ரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச் சல் அடைந்துள்ளதாக அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித் துள்ளனர். இதனிடையே, சந்தேகத் தின்பேரில் அழைத்துச் சென்ற 4 நபர்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டுவதற்காக சென்னைக்கு போலீஸார் அழைத்துத் சென்றதாகவும் இதில், யாரையும் அப்பெண் அடையாளம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறியதாவது: கடற்கரையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உண்மையில் வேதனை அளிக்கிறது. வேறு யாருக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சம்பவம் நடைபெற்ற நாளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த நபர்களை மாதிரி புகைப்படத்தில் உள்ள அடையாளங்கள் உள்ளதாக கூறி, நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் எட்வர்ட்டிடம் கேட்டபோது, ‘சந் தேகப்படும் நபர்களிடம் மட் டுமே போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீ ஸாரால் மீனவர்கள் மன உளைச் சல் அடைந்துள்ளதாக எங்களிடம் மீனவப் பெண்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்’ என்றார்.

SCROLL FOR NEXT