தமிழகம்

காவிரியில் புதிய அணைகள்: டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு

செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டும் திட்டத்தைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று (நவ. 22) முழுஅடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 500 இடங்களில் சாலை மறியலும், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமை யில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கவில்லை.

நவ.29-ல் சாலை, ரயில் மறியல்

இதே கோரிக்கையை வலியுறுத்தி நவ. 29-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய அமைப்புகள் தலைமையில் டெல்டா மாவட்டங்களில் 500 இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT