தமிழகம்

வைகோவுக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது: பிரேமலதா

செய்திப்பிரிவு

நாளிதழில் வந்த செய்திக்காக வைகோவுக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

நெல்லையில் இன்று தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பிரேமலதா பேசியதாவது:

நாளிதழில் வந்த செய்திக்காக வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது. இதை சட்ட ரீதியாக வைகோ சந்திப்பார். வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கருணாநிதி திரும்பப் பெற வேண்டும்.

கூட்டணிக்காக கடந்த நான்கு மாதங்களாக தேமுதிகவை நோக்கி வராத கட்சிகளே கிடையாது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக இருக்கும்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

SCROLL FOR NEXT