தமிழகம்

பேரவைத் துளிகள்

செய்திப்பிரிவு

* பேரவை அரங்கில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. காலை 10.20 மணியில் இருந்தே அரங்குக்குள் வந்த உறுப்பினர்கள், தங்களுக்கான இருக்கையில் அமரத் தொடங்கினர்.

* திமுக உறுப்பினர்களுக்கு அகர வரிசை அடிப்படையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், முதல் வரிசையில், தா.மோ.அன்பரசன், அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். ஆனால், ஜெ.அன்பழகன் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

* ஆளுநர் உரை 11 மணிக்கு தொடங்கி 11.37க்கு முடிந்தது. அதன் தமிழ் உரையை பேரவைத் தலைவர் 11.38 முதல் பகல் 12.18 வரை வாசித்தார்.

* ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசிக்கும் போது முதல்வர் அவரது உரையை உன்னிப்பாக கவனித்தார்.

* மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் கு.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கான வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தனர்.

* முதல்வரையும் அரசையும் ஆளுநர் பாராட்டியபோதும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டபோதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.

SCROLL FOR NEXT