தமிழகம்

பிஎஸ்3 வாகனங்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி: தமிழகத்தில் 2 நாட்களில் 40 ஆயிரம் புதிய இருசக்கர வாகனங்கள் பதிவு

செய்திப்பிரிவு

இந்தியாவில் வாகனங்கள் வெளி யிடும் புகை மற்றும் மாசு அளவு பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்.) என்று அளவீடு செய்யப்படுகிறது. அதா வது, பி.எஸ் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாகனங்கள் வெளியிடும் நச்சு புகையின் அளவு குறைந்து வருவதாக பொருள்.

அதிகரித்துவரும் வாகனங் களின் புகையால் நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, இனிவரும் காலங்களில், வாகனங்களில் பி.எஸ். 4 வகை இன்ஜின்களை பொருத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பல்வேறு இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங் கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) முதல் பி.எஸ்.3 கொண்ட புதிய இருசக்கர வாகனங் களை விற்பனை செய்யவோ அல்லது பதிவு செய்யவோ கூடாது என உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு கடைகளில் நிறுத் தப்பட்டிருந்த பி.எஸ்.3 தொழில் நுட்பம் கொண்ட இருசக்கர வாக னங்களை விற்பனை செய்வதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் புதிய இருசக்கர வாக னங்களை வாங்குவதில் பொது மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டினர்.

வாகனங்கள் தீர்ந்தன

தமிழகத்தில் நேற்று முன்தினமே பல ஷோரூம்களில் சலுகை விலை இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்துவிட்டன. வாகனங்கள் இருப்பு இருந்த ஒருசில கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு வேண்டிய உறவினர் கள், நண்பர்களுக்கு மட்டும் விநியோகஸ்தர்கள் வாகனங்களை விற்பனை செய்ததாகவும், ஒருவர் பெயரிலேயே பல வாகனங்களை வாங்கி, பதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் 70 வட்டார போக்குவரத்து அலுவலங்களிலும் (ஆர்.டி.ஓ) கடந்த 2 நாட்களாக ஆன்லைன் வழியாக இருசக்கர வாகனப் பதிவு அதிகமாக இருந்தது. கூடுதல் நேரம் அலுவலகங்கள் இயங்கின. இதேபோல், இருசக்கர வாகன விற் பனை மையங்களிலும் விற்பனை யாளர்கள் நள்ளிரவு வரை ஆன் லைன் வழியாக புதிய வாகனங் களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறிய தாவது:

தமிழகம் முழுவதும் வழக்கமாக தினமும் சராசரியாக 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பதிவாகும். ஆனால், நேற்று முன்தினம் சுமார் 20 ஆயிரம் வாகனங்களும், நேற்று 20 ஆயிரம் வாகனங்களும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் இருந்தே ஆன்லைன் மூலம் புதிய வாகனங்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். இதில், எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு இல்லை என்றனர்.

இது தொடர்பாக சென்னை யைச் சேர்ந்த ஹீரோ வாகன விநியோகஸ்தர் விக்னேஷ் கூறும் போது, ‘‘ஒரு மாதத்தில் நாங்கள் விற்க வேண்டிய இருசக்கர வாக னங்களை ஒரே நாளில் விற்கிறோம். வாகனங்கள் பிரிவுக்கு ஏற்றவாறு ரூ.5000 முதல் ரூ.18 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்கிறோம்’’ என்றார்.

தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் அதிக அளவில் இருசக்கர வாக னங்கள் விற்பனை நடந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி மாவட்டங்களில் இருசக்கர வாகன விற்பனையகங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந் தது. ஆனால் வாகனம் கிடைக்கா மல் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களி லும் மொத்தமாக பதிவு செய்வதற் காக ஏராளமான இருசக்கர வாக னங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

திருச்சியில் பல ஷோரூம்களில் நேற்று முன்தினம் இரவே வாகனங் கள் இருப்பு இல்லை என கூறினர். சில ஷோரூம்களில் அதிகம் விற் பனையாகாத சில வகை வாகனங் கள் நேற்று மாலை வரைகூட இருப்பு இருந்தன. ஒருசில ஷோ ரூம்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களே நேரடியாகச் சென்று வாகனங்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகன விற்பனையகங் களில் இருப்பில் இருந்த பிஎஸ் 3 வாகனங்களில் 90 சதவீத வாக னங்கள் நேற்று முன்தினம் இரவி லும், எஞ்சிய வாகனங்கள் நேற் றும் விற்று தீர்ந்தன. நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலை 6 மணி வரை புதிய வாகனங்கள் பதிவு நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பெரும் பாலான இருசக்கர வாகன விற்பனை யகங்களில் நேற்று காலையிலேயே அனைத்து பி.எஸ்.3 வாகனங்களும் விற்றுவிட்டதாகத் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் பஜாஜ், யமஹா மற்றும் டிவிஎஸ் நிறுவனங் களில் பிஎஸ்-3 வகை வாகனங்கள் அனைத்தும் நேற்று 12 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன.

ஹீரோ வாகன விற்பனை யகங்களில் மட்டும் நேற்று பிற்பகல் வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்துகொண்டனர்.

SCROLL FOR NEXT