தமிழகம்

ரூ.81 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சியுடன் கியூபா இளைஞர் குமரி அருகே கைது

செய்திப்பிரிவு

களியக்காவிளை அருகே சுற்றுலா பேருந்தில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பணத்துடன் (பவுண்ட்) பயணம் செய்த கியூபா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்துள்ள கேரள எல்லைப்பகுதியான அமரவிளை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் மாலை கேரள போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த சுற்றுலா பேருந்தில் சோதனையிட்டனர்.

அதில் பயணம் செய்த கியூபா நாட்டு இளைஞரிடம் சோதனை நடத்தியதில் அவரது பெட்டியின் ரகசிய பகுதியில் இந்திய மதிப்பு ரூ.81 லட்சத்துக்கு இங்கிலாந்து கரன்சிகள் (பவுண்ட்) இருந்தன. அவற்றுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT