தமிழகம்

சித்ரா பவுர்ணமி, மே தின தொடர் விடுமுறை: அரசு பேருந்துகளில் 2.13 லட்சம் பேர் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: மே தின தொடர்​விடுமுறை, சித்ரா பவுர்​ணமியை முன்​னிட்டு நேற்று முன்​தினம் இயக்​கப்​பட்ட சிறப்பு பேருந்​துகளில் 2.13 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

மே தினத்தை தொடர்ந்து சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை என 3 நாட்​கள் தொடர் விடு​முறை இருந்​த​தால் அதி​கள​வில் மக்​கள் வெளியூர்​களுக்கு பயணம் மேற்​கொள்​வார்​கள், குறிப்​பாக ஐடி உழியர்​கள் மற்​றும் பல துறை​களில் பணிபுரிவோர் இந்த விடு​முறை​யில் சுற்​றுலா செல்​வார்​கள் என்​ப​தால், போக்​கு​வரத்து துறை சார்​பில் கூடு​தலாக சிறப்பு பேருந்​துகள் நேற்று முன்​தினம் (ஏப்​.30-ம் தேதி) முதல் மே 2-ம் தேதி வரை இயக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதே​போல நேற்று சித்ரா பவுர்​ணமியை முன்​னிட்டு திரு​வண்​ணா​மலை செல்​லும் பக்​தர்​களுக்​காக கடந்த 2 நாட்​களாக சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் அரசு இயக்​கிய சிறப்பு பேருந்​துகளில் 2.13 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மே தின தொடர்​விடு​முறை மற்​றும் சித்ரா பவுர்​ணமியை முன்​னிட்​டு, பொது​மக்​கள் பயணம் மேற்​கொள்ள வசதி​யாக தமிழ்​நாடு அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் மூலம் சென்​னையி​லிருந்து சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

ஏப்​.30-ம் தேதி முதல் மே 1-ம் தேதி அதி​காலை 3 மணி வரை, வழக்​க​மாக இயக்​கப்​படும் 2,092 பேருந்​துகள் முழு​மை​யாக இயக்​கப்​பட்​டதுடன், கூடு​தலாக 1,784 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 3,876 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 2,13,180 பயணி​கள் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர்.

மேலும் இன்​றைய தினம் 3,150 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர், சென்​னை​யில் இருந்து கூடு​தலாக 450 பேருந்​துகள் இயக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT