நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர் கள் 4 பேரை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்தனர். மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள னர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக். நீரிணை கடல்களில் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கணக் கிட்டு ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடி தடைக் காலம் அறிவிக் கப்படுகிறது. இதனால் விசைப்படகு கள் கடலுக்குச் செல்லவில்லை.
மீன்பிடி தடைக் காலம் முடி வடைந்து ஒரு வாரமாக விசைப் படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். முதல் நாளான திங்கட்கிழமை ராமேசு வரம் மீனவர்கள் 7 பேர் சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டணம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை ஜுன் 2-ம் தேதி சிறைபிடித்து யாழ்ப் பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 500-க் கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக் குச் சென்றனர். பாஸ்கரன் என்பவ ரது விசைப்படகில் இருந்த 4 மீன வர்கள் நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் அந்த விசைப்படகை கைப்பற்றி 4 மீனவர்களையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர்.
45 நாட்கள் மீன்பிடி தடைக்குப் பின்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஒரே வாரத்தில் அடுத்தடுத்த 3 சம்பவங்கள் மூலம் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.