மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற 'டிராஃபிக்' படத்தினை இந்தியில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ரீமேக் செய்கிறது.
மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்று, பல்வேறு விருதுகளை குவித்த படம் 'டிராஃபிக்'. சீனிவாசன், ரஹ்மான், ஆஷிப் அலி, வினித் சீனிவாசன், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தினை ராஜேஷ் பிள்ளை இயக்கியிருந்தார்.
இப்படத்தினை தமிழில் 'சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். ஆனால் ராஜேஷ் பிள்ளை தமிழ் ரீமேக்கை இயக்கவில்லை. இந்தி ரீமேக் இயக்கவிருப்பதால், தமிழ் இயக்க முடியாது என்று விலகிக் கொண்டார்.
தற்போது 'டிராஃபிக்' இந்தி ரீமேக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினை எண்டிமால் நிறுவனத்துடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.
மனோஜ் பாஜ்பாய், ஜிம்மி ஷர்கில், திவ்யா தத்தா, உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ராஜேஷ் பிள்ளை இயக்கவிருக்கிறார்.