தமிழகம்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அம்மா உணவகம்

செய்திப்பிரிவு

தலைநகர் புதுடெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் விழா நடைபெறும். இதில், தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் இடம்பெறும்.

இந்த ஆண்டின் பொங்கல் விழா, வரும் 12-ம் தேதி முதல், 14-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதில் சென்னையிலுள்ள அம்மா உணவகம் மாதிரியே , ஒரு உணவகம் செயல்பட உள்ளது. சென்னை அம்மா உணவகங்களில் வழங்கப்படும் பொங்கல், இட்லி, சாம்பார் மற்றும் தயிர் சாதம், கருவேப்பிலை, எலுமிச்சை சாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது .

அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT