தமிழகம்

தொழிலாளர்களுடன் நோக்கியா நிறுவனம் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

நோக்கியா ஆலையில் பணி யாற்றிய ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொழிலாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து அதில் பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கு வது தொடர்பாக வெள்ளிக் கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் கடந்த மே மாதம் தொழிலாளர் விருப்ப ஓய்வு பெறும் போது வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு லட்சம் ரூபாய் தர நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் தொழிலாளருக் கும் ரூ.6 முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இதற்கு சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT