கோவையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனம் மற்றும் அடகு கடையில் வைக்கப்பட் டிருந்த ரூ.1.76 கோடி நகை, பணம் கொள்ளை போனது.
கோவை புதூர், ஓம்சக்தி நகரில் இந்தியா இன்போ லைன் பைனான்ஸ் லிமிடெட் (ஐ.ஐ.எஃப்.எல்.) என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் நகை அடகுக்கடை உள்ளது. கோவை புதூரில் உள்ள கிளை அலுவலகத் தின் மேலாளராக இருந்தவர் சுனில்குமார். இவர், நேற்றுமுன் தினம் மேலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாகக் கூறப் படுகிறது. இதையடுத்து, அருண் குமார் என்பவர் மேலாளராக நேற்றுமுன்தினமே பொறுப்பேற் றாராம்.
இந் நிலையில், நேற்றுமுன் தினம் இரவு நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்றனர். காவலாளி மட்டும் பாதுகாப்புக்கு இருந்துள் ளார். அவரும், நேற்று காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பகல் 11 மணி அளவில் அங்கு துப்புரவுப் பணி செய்யும் பெண் ஒருவர், நிறுவனத்தின் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் பேரில் சுனில்குமார், அருண்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர்.
அதில், நிறுவனத்தின் நுழைவு வாயிலில் உள்ள பூட்டு இரும்பு சாவியால் திறக்கப்பட்டுள்ளது. உள்ளே ஷட்டர் டைப்பிலான கதவும், மற்றொரு கதவும் சாவியைக் கொண்டு திறந்து கிடந்தது. மேலும், 7 லாக்கர்கள் திறக்கப்பட்டு அதில்இருந்த நகை, பணம் ஆகியவை திருடப்பட் டிருந்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், துணை ஆணையர்கள் பரவேஸ் குமார் (சட்டம்-ஒழுங்கு), ஆர்.ரம்யபாரதி (குற்றப் பிரிவு) தலை மையிலான அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. நிறுவனத்தின் கதவுகள், லாக்கர்கள் அனைத் தும் சாவியைக் கொண்டு திறக்கப் பட்டுள்ளதால் போலீஸார், சம்பந் தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது சந்தேகம் அடைந் துள்ளனர்.
இதையடுத்து, நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய சுனில்குமார், மேலாளர் அருண் குமார், பெண் ஊழியர் சீத்து, ஏரியா மேலாளர் சந்திரசேகர், காவல் காரர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிறுவனத்தில், கடந்த சனிக்கிழமை இரவு கணக்கின்படி ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள், 5.76 லட்சம் பணம் வைத்திருந்ததாக நிறுவனத்தின் மேலாளர் போலீஸாரிடம் தெரிவித் துள்ளார். ஆனால், இந்த மதிப்பை போலீஸார் உறுதிப்படுத்த வில்லை.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியபோது, திருட்டு தொடர் பாக 8 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத் தின் பூட்டுகள் ஏதும் உடைக்கப் படவில்லை. சாவியை பயன்படுத்தி தான் உள்ளே சென்று திருடியுள் ளனர்.
கேமிராவும் திருட்டு
அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். திருடப்பட்ட நகை,பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
திருட்டில் ஈடுபட்டவர்கள் சி.சி.டி.வி. கேமிரா மற்றும் அது தொடர்பான பொருள்களையும் திருடிச் சென்றுவிட்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டது.
எனவே, நிறுவனத்தில் பணி யாற்றி வருபவர்களில் சிலர்தான் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.