தமிழகம்

தேர்தல் கூட்டணி பேச்சு நடத்த 51 பேர் குழு

செய்திப்பிரிவு

பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு (கொ.மு.க.) மாநில, மாவட்ட மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்மட்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தேர்தல் கூட்டணி மற்றும் முக்கிய செயல்பாடுகளை இறுதி செய்யும் என்று கொ.மு.க. மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொ.மு.க மாநில, மாவட்ட மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்மட்ட நிர்வாகக் குழு அமைப்பது; தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் முக்கிய செயல்பாடுகள் பற்றி இக்குழு விரைவில் கூடி முடிவு செய்யும். வரும் கோடையில் கடுமையான வறட்சி உருவாகும் நிலை காணப்படுவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT