சென்னையில் பசுமை போர்வையை அதிகரிக்க மாநகராட்சி யில் பூங்கா பராமரிப்புக்கென்று தனித் துறை உருவாக் கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்றைய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வெளியாகிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அறிவுறுத்தல்படி, மனிதன் உயிர் வாழ ஆக்சிஜன் போதிய அளவு இருக்க வேண்டுமென்றால், நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் பசுமை போர்வை இருக்க வேண்டும். பசுமை போர்வையின் முக்கியத்துவம் குறித்து அரசுத் துறைகளிடையே விழிப் புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தில் இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்த, மாநகராட்சி பொறியியல் துறையின் ஒரு அங்கமாக இருந்து வந்த பூங்கா பிரிவு, தனித் துறையாக உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் மன்ற கூட்டத்தில் வெளியாகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.