ரயில்வே வார விழா தொடங்கிய சிறிது நேரத்தில் விழா மேடையில் வெடிகுண்டு சோதனை நடந்ததால் பார்வையாளர்கள் கலக்க மடைந்தனர்.
சென்னையில் வெள்ளிக்கிழமை 59-வது ரயில்வே வார விழாவின் தொடக்க விழா நடந்தது. விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கத்துக்குள் திடீரென நுழைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் மேடையில் சோதனை மேற் கொண்டனர்.
வெடிகுண்டு கண்டறியும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால், விழாவில் கலந்து கொண்டவர்கள் கலக்கம் அடைந் தனர்.
அரங்கத்துக்குள் இருந்த பூந்தொட்டிகளும் சோதனைக்குட் படுத்தப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் வளியேறிய பின்னரே பார்வையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு கமிஷனர் காந்தியிடம் கேட்டபோது, “இது வழக்கமான பாதுகாப்பு சோதனைதான். வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முக்கியப் பிரமுகர்கள் மேடை ஏறுவதற்கு முன்பு சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான்” என்றார்.