திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் அன்பு மணி ராமதாஸ் நேற்று பங்கேற் றார். முன்னதாக மதுரை விமான நிலையத்திலும், பின்னர் திண்டுக் கல்லிலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவர வேண்டும். மணல் விற்பனையில் ஆன்லைன் முறையை கொண்டு வரவேண்டும். பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும்.
தமிழக கடன் சுமை
ரூ.1.6 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, கடந்த 6 ஆண்டுகளில் ரூ.5.75 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இது ரூ.10 லட்சம் கோடியாக மாற வாய்ப்புள்ளது. தமிழகம் இருண்ட காலத்தில் உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை யில் அமையவில்லை என்றால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அமைச்சர் பதவி விலகினால், அது வரவேற்கத்தக்கது என்றார்.