2011 சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க. நகர் (தனி)
வென்றவர்: வி. நீலகண்டன் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 72887
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டாக்டர். சி. நடேசன் (காங்)
பெற்ற வாக்குகள்: 43546
அ.இ.அ.தி.மு.க-வின் வ. நீலகண்டன் இந்தப் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர். தரமான பள்ளி,கல்லூரிகள் அருகாமையில் அமைந்துள்ளது. அருகாமியில் பள்ளிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தியாகவே உள்ளது. அதே நேரம் அரசு கல்லூரிகள் புதிதாக திறக்கப் பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் காணப்படுகிறது. ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைக்கின்றது, என்பது மகிழ்ச்சியளித்தாலும் சில பகுதிகளில் மாதம் முழுவதும் சீராக பொருட்கள் கிடைத்தால் மக்கள் நெரிசல் இன்றி பொருட்கள் பெற முடியும் என்ற கருத்தும் வலுவாக நிலவுகிறது.
அருகாமை பள்ளிகள், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம், அரசின் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கும் இப்பகுதியினர், அரசு அதிகாரிகள் செயல்பாடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், மாநகாரட்சியின் குப்பை மேலாண்மை குறித்த அதிருப்தியும் அதிகளவில் நிலவுகிறது. சுகாதரமற்ற ஆட்டுதொட்டி , கவனிப்பாறின்றி இருக்கும் குடிசை மாற்று குடியிருப்புகள் மக்களின் வேதனையாக வெளிப்படுகிறது.