புறநகர் மின்சார ரயில்களில் கால அட்டவணை புத்தகத்தில் குறிப் பிடப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. திருவள்ளூர்-திருவாலங் காடு வழித்தடத்தில் கடந்த ஓராண்டாக ரூ.5-க்கு பதிலாக ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பேருந்துக் கட்ட ணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் அதிகள வில் ரயிலில் செல்கின்றனர்.
புறநகர் மின்சார ரயிலில் தற்போது ஒன்று முதல் 20 கி.மீட்டர் தூரத்துக்கு கட்டணம் ரூ.5-ம், 21 முதல் 45 கி.மீட்டருக்கு ரூ.10-ம், 46 முதல் 70 கி.மீ. தூரத்துக்கு 15-ம், 71 முதல் 80 கி.மீ. தூரத் துக்கு ரூ.20-ம் கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரம், தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள கால அட்டவணை புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்நிலையில், பயணி ஒருவர் திருவள்ளூரில் இருந்து திருவாலங்காட்டுக்கு கடந்த 23-ம் தேதி ரயிலில் பயணம் செய் துள்ளார். இந்த இரு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் 17 கி.மீட்டர். ரயில்வே கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, ரூ.5 கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, ரூ.10 கட்டணமாக வசூலிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, பாலாஜி என்ற அந்த பயணி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கடந்த 23-ம் தேதி திருவள்ளூரில் இருந்து திருவாலங்காட்டுக்கு சென் றேன். இந்த இரு ரயில் நிலை யங்களுக்கு இடையே உள்ள தூரம் 17 கி.மீட்டர். என்னிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து, டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரிடம் கேட்டபோது, “கணினியில் என்ன கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதைத் தான் நான் வசூலிக்கிறேன்” என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வந்தது. கடந்த ஓராண்டாக ரயில்வே நிர்வாகம் இதுபோல் அதிகளவில் கட்டணம் வசூலித்து வருகிறது.
இவ்வாறு பாலாஜி கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே வர்த்த கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இப்பிரச் சினை குறித்து இதுவரை யாரும் எங்களுக்கு புகார் தெரிவிக்க வில்லை. ஒருவேளை கணினியில் கட்டண விவரங்களைப் பதிவு செய்யும்போது ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம். இதுகுறித்து, உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.