தேனி அருகே வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பொதுமக்கள் மறி யலில் ஈடுபட்டு டாஸ்மாக் கடை மீது கல்வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக 20 பெண்கள் உட்பட 35 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே வாழையாத் துப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் விக்னேஷ்கு மார்(16). இவர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி இரவு விக்னேஷ்குமார் சைக்கிளில் ஆதிப்பட்டி அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பூதிப்புரத்தைச் சேர்ந்த ஷா ரூக்கான் என்பவர் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் இரு வரும் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்னேஷ்குமார் சிகிச்சை பல னின் றி நேற்றுமுன்தினம் இறந்தார்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை அன்று இரவு சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்தபோது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாழை யாத்துப்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சிலர் அருகில் இருந்த டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கினர். இதனால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் தப்பினர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டு விக்னேஷ்குமாரின் உடலை உறவினர் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதுடன், கடையின் மேற்பார்வையாளர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், கும்பலாக ஒன்றுகூடி, அரசு சொத்துகளை சேதப்படுத்து தல், சட்ட விரோதமாக ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், 20 பெண்கள் உட்பட 35 பேர் மீது பி.சி.பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய் தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடை அருகில் உள்ளதால் அங்கு மது அருந்திவிட்டு ஷாரூக்கான் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்ப டுத்தியதாக மாணவரின் உறவினர் கள் குற்றம்சாட்டினர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் மது குடிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
சாலை மறியல் மற்றும் டாஸ்மாக் கடையின் மீது கல்வீசி தாக்கப் பட்டது தொடர்பாக போலீஸார் வீடியோ படம் எடுத்துள்ளனர். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்ய பிசி பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (பொ) முத்துலெட்சுமி தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது என்றார்.