தமிழத்தில் உள்ள துறைமுகங்களை பொது மக்கள் பார்வையிட, தை மாதம் முதல் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் ஆண்களுக்கான நவீனபடுத்தப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்த அவர், "சென்னை கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் மிகுதியாகியுள்ளது.
கலங்கரை விளக்கத்தை பார்வையிடும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்கின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து பார்வை நேரத்தை நீடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதேபோல் பொது மக்களும் மாணவர்களும் துறைமுகங்களை பார்வையிடும் நிகழ்ச்சியை மும்பையில் தொடங்கி வைத்தேன். தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களை தை மாதம் முதல் அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்வேன்" என்றார் ஜி.கே.வாசன்.
சென்னை துறைமுகத்தில் நவீனபடுத்தப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் ஜி.கே.வாசன்