ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், புதிய வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று பிரச்சாரத்தை தொடங் கினார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள் ளார். அதனைத் தொடர்ந்து, தொகு திக்குள் தேர்தல் அலுவலகம் திறப்பது, அந்தந்த வாக்குச்சாவ டிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருவது உள் ளிட்ட பணிகளை அவர் மேற் கொண்டு வந்தார். நேற்று முன் தினம் நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில், அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய வண்ணாரப் பேட்டை பகுதியில் நேற்று அவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னாள் அமைச்சர் பொன் முடி, வடசென்னை மாவட்ட செயலர் சுதர்சனம், அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏ மோகன் உள்ளிட்டோர், திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். புதிய வண் ணாரப்பேட்டையில் தேசிய நகர், வேணுகோபால் நகர், செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்றும், பெரியவர்களின் காலில் விழுந்தும் மருது கணேஷ் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி நிருபர்களி டம் கூறும்போது, “பொதுமக்கள் எங்களை ஆர்வத்தோடு வர வேற்று, ‘உங்களுக்குதான் வாக் களிப்பேன்’ என்று உறுதியளித்து வருகின்றனர். வேட்பாளர் மருது கணேஷ், அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறுவார்” என்றார்.