அம்பத்தூர் மண்டலத்தில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ள பகுதிகளில் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு பெற சிறப்பு முகாம் நாளை (ஜூன் 17) நடைபெறுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பணிமனை 79 முதல் 82 மற்றும் 85 ஆகிய பகுதிகளில் உள்ள ராம்நகர், லெனின் நகர், விநாயகபுரம், விஜயலட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வெங்கடாபுரம், சோழபுரம், ஞானமூர்த்திநகர், ஈ.பி.காலனி, மேனாம்பேடு, ஒரகடம், புதூர், பானுநகர், கள்ளிக் குப்பம், வரதராஜபுரம், ராமாபுரம், சம்தாரியாநகர், காமராஜபுரம், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
விண்ணப்பித்ததும் இணைப்பு
ஆகவே, வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு, 17-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை அம்பத்தூர்-செங்குன்றம் சாலையில் உள்ள அருள்ஜோதி திருமண மண்டபத் தில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக்கான தொகையை வரைவு காசோலையாக, அந்த சிறப்பு முகாமிலேயே செலுத்தலாம். விண்ணப்பித்த அன்றே கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.