தமிழகம்

ஆதி சங்கரர் கோயில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி சுவாமிகள் நடத்தி வைத்தனர்

செய்திப்பிரிவு

சத்தியமங்கலத்தில் ஆதி சங்கரர் கோயில் கும்பாபிஷேகத்தை சிருங் கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், அவரது சீடர் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் ஆகியோர் நேற்று நடத்தி வைத்தனர்.

கர்நாடக மாநிலம் சிருங்கேரி யில் உள்ள ஸ்ரீசாரதா பீடத்தின் மடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமி கள், அவரது சீடர் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத் தில் யாத்திரை மேற்கொண்டுள் ளனர். கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் மாலை பண்ணாரி வழியாக சத்தியமங்கலம் வந்த சுவாமிகளுக்கு சிருங்கேரி மடத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் வேணு கோபால ஸ்வாமி கோயில் வீதியில் சிருங்கேரி சங்கர மடத்தின் சார்பில் ஸ்ரீஆதிசங்கரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. யாக பூஜைகளைத் தொடர்ந்து மூலவர் ஆதிசங்கரருக்கு ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் அபிஷேகம் செய்து, பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிருங்கேரி சங்கர மடத்தின் சீடர்களும், பக்தர்களும் பங்கேற்ற னர்.

இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் ஏவிஎஸ் மஹாலில் சுவாமிகள் பொதுமக்களுக்கு தரிசனம் அளித்து ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு சுவாமிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினார். மாலையில் குரு வந்தன நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சுவாமிகள் அருளுரை நிகழ்வும் நடந்தது. நேற்றைய நிகழ்வின் இறுதியில் மஹா சுவாமிகள் ஸ்ரீசாரதா சந்த்ர மவுலீஸ்வர பூஜை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT