தமிழகம்

களைகட்டிய பிரம்மோற்சவ திருவிழாக்கள்: திருவள்ளூர், குன்றத்தூரில் தேரோட்டம் - வேதகிரீஸ்வரர் தந்தத்தொட்டி உற்சவம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம் நடைப்பெற்ற பிரம்மோற்சவ திருவிழாக்களில் தேரோட்டம் உள்ளிட்ட உற்சவம் நடைப்பெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தந்தத்தொட்டியில் எழுந்தருளி உற்சவர் வேதகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வரும் 9-ம் தேதி காலை 11 மணிக்கு வேதகிரீஸ்வரர் சங்கு தீர்த்த குளம் மற்றும் ரிஷப தீர்த்த குளத்தில் இறங்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதேபோல், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று மோகினி அவதாரத் தில் உற்சவர் ஸ்தலசயன பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருவள்ளூர்

108 வைணவ திருத்தலங்களில் ஒன் றாக விளங்கும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நேற்று திருத்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. அஹோபில மடத்தின் 46-வது ஜீயர் மத் அழகிய சிங்கர் சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மாலைவேளையில் பத்தி உலாவும், இரவு 7 மணியளவில் திருமஞ்சனமும் நடைபெற்றன.

குன்றத்தூர்

குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேசுவர சாமி கோவில் அமைந்துள்ளது. நவ கிரகங்களில் ராகு ஸ்தலமான இந்த கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று மகா தேர் உற்சவம் நடைபெற்றது.

இதில் காலையில் சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு 6 மணிக்கு அலங் கரிக்கப்பட்ட தேர், தேரடியில் இருந்து புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற திருத்தேர் திருவிழா.

SCROLL FOR NEXT