தமிழகம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,500 வழங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோ ருக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 500 வழங்கக் கோரி, அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தினர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

பொதுத்துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகளில் சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றி ருக்கிறோம். எங்கள் ஊதியத்தில், ஓய்வூதி யத்துக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை பல லட்சம் கோடி மத்திய அரசிடம் உள்ளது. அதைக் கொண்டு, ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். கோஷியாரி கமிட்டி பரிந்துரை யின்படி இடைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT