தமிழகம்

இன்று முதல் அமலுக்கு வருகிறது: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 1-ம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரோக்யா மற்றும் கெவின்ஸ் பால் நிறுவனங்களும் 6-ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தின. இந்நிலையில், மற்ற தனியார் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகியவையும் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

தயிர் விலையும் உயர்வு

திருமலா மற்றும் ஹெரிடேஜ் நிறுவனங்களின் தயிர் விலையும் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 60 மில்லி தயிர் ரூ. 6-ல் இருந்து ரூ.7 ஆகவும், 100 மில்லி ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறும்போது, ‘‘தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்த்தி வருகின்றன.

இந்த ஆண்டில் மட்டும் தனியார் நிறுவனங்களின் பால் விலை 5-வது முறையாக உயர்த்தப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

புதிய விலைப் பட்டியல்

பால் வகை (ஒரு லிட்டர்)

திருமலா

டோட்லா

ஹெரிட்டேஜ்

ஜெர்சி

சமன்படுத்தப்பட்டவை

44

42

44

40

நிலைபடுத்தப்பட்டவை

48

46

48

46

முழு கொழுப்பு சத்து

52

52

52

50

இருமுறை சமன்படுத்தப்பட்டவை

40

36

40

36

SCROLL FOR NEXT