வீட்டு இணைப்பு, நெசவாளர்களுக் கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:
உதய் மின் திட்டத்தில் சேர முதலில் இந்த அரசு மறுத்தது. 3 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்துவது, தனியார் மின் உற்பத்தியாளர்கள், வங்கிகளுக்கு லாபமான திட்டம் என்பது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், கடந்த 9-ம் தேதி முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்து போட மறுத்த காரணங்களில் பல இன்னமும் அப்படியே இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் கட்டணத்தை உயர்த்த ‘டேரிப் பெட்டிசன்’ தாக்கல் செய்யப் பட வேண்டும் என உள்ளது. அப்படி யானால், ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டண உயர்வு உண்டா?
அமைச்சர் பி.தங்கமணி:
ஆண் டுக்கு ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் 100 சதவீதம் கிடை யாது. 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு எதிர்த்த தால், நாடு முழுவதும் அத்திட்டம் அமலாக்கப்படவில்லை.
மு.க.ஸ்டாலின்:
உதய் திட்டத் தில் சேருவதற்கு முன்னோட்டமாக 2015-ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா? விவசாயிகள் தவிர அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் என்ன ஆகும்?
அமைச்சர் பி.தங்கமணி:
உதய் திட்டத்துக்கும், 2015-ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதால், மின் இழப்பு தடுக்கப்படும். அலுவலகத் தில் இருந்தபடியே மின் அளவைக் கணக்கிட முடியும். விவசாயிகள், குடிசைகள், வீட்டு இணைப்பு களுக்கு 100 யூனிட், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் தொடரும்.