சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் தந்தை பெரியார் சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) பல சமயங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியிலிருந்து எதிரில் இருக்கும் மேம்பாலத்தில் போய் இறங்குவதற்கு வசதி யாக நடைமேடைகளைத் தற்காலிகமாக அமைத்தால் இப் பிரச்சினைகள் பெரும் பாலும் தீரும் என்று கூறப்படுகிறது.
ரிப்பன் மாளிகை எதிரில் சென்னை கடற்கரை தாம் பரம் மார்க்க பயணிகளுக் காக நகரும் படிக்கட்டு களுடன் மேம்பாலம் அமைத்திருக்கும்போது இப் பகுதியில் மட்டும் ஏன் அது போன்ற நடைமேடைகளை அமைக்கவில்லை என்று இப் பகுதி வழியாக செல்லும் பயணிகள் கேள்வி எழுப்பு கின்றனர்.
அதை விட்டுவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக் குள்ளேயே தொடங்கி அதற்குள்ளேயே முடிந்து விடும் வகையில் தாற்காலிக நடைமேடை அமைக்கப் பட்டதைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பல்லவன் சாலை வழியாக எம்.டி.சி. பேருந்துகள் மட்டுமே சென்ட்ரலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கட்டுப் படுத்தினால் மேம் பாலத் தில் நெரிசலே இருக்காது. அந்த வழியாகச் செல்லும் ஆட்டோ, கார், டூ வீலர்களில் சுமார் 60% முதல் 70% வரையில் சென்ட்ரலுக்குச் செல்பவை அல்ல.
அந்த வாகனங்களை அண்ணா சாலையின் இறுதி வரை செல்ல அனுமதித்து இடதுபுறம் திரும்பி பல் மருத்துவமனை வழியாகச் செல்லவிடுவதில் பிரச்சினை அதிகம் கிடையாது. சோதனை முயற்சியாக 2 வாரங்களுக்கு இதை நெரிசல் நேரத்திலாவது அமல்படுத்திப் பார்க்கலாம் என்று பயணிகள் பலரும் கூறுகிறார்கள்.
பல்லவன் சாலையில் தொழிற்சங்கக் கூட்டம் அல் லது ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறும்போது ஒட்டு மொத்தப் போக்குவரத்தும் பல் மருத்துவமனை வழி யாகத் தான் அடிக்கடி திருப்பி விடப்படுகின்றன. எனவே இந்தப் போக்குவரத்து மாற்றத்தை செய்ய பெரிய அளவில் சிக்கல் ஏதும் இல்லை.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “வாகன நெரிசல் குறித்து எங்களுக்குத் தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. போக்கு வரத்து நெரிசலை முற்றிலும் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதற் கான அறிவிப்பு வெளிவரும்” என்றார்.