தமிழகம்

திடீர் விடுப்பில் சென்றார் உளவுத்துறை ஐஜி: தாமரைக் கண்ணனுக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு வசதியாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, அரசு ஆலோ சகராக இருந்த ஷீலா பாலகிருஷ் ணனும் முதல்வரின் முதல் நிலை செயலாளராக இருந்த வெங்கடரமணனும் ராஜினாமா செய்துவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது உளவுத் துறை ஐ.ஜி.யாக இருக்கும் சத்தியமூர்த்தி திடீரென விடுப் பில் சென்றுள்ளார்.

இதனால், அவரும் மாற்றப் படலாம் என்று கூறப்படுகிறது. சசிகலா உறவினர் ஜெயச் சந்திரன் ஏற்கெனவே, உளவு பிரிவில் ஏடிஎஸ்பியாக பணி யமர்த்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள சத்தியமூர்த் தியை மாற்றிவிட்டு அந்தப் பதவி யில் தற்போது சென்னை நுண் ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் ஆணையராக உள்ள தாமரைக் கண்ணனை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT