மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் அதிமுக பலத்த தோல்வி அடையும். அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெற மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலை வர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டது குறித்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் மழை வெள்ளத்தாலும், போதிய தண்ணீர் கிடைக்காததாலும் ஏராளமான விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களது கடனை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசியலில் மாறுபட்ட கருத்து களை விஜயகாந்த் சொல்லி இருக்கிறார். இதற்காக அவரு டைய வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவது தேவையற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடு வதுதான் எங்களின் குறிக்கோள். கூட்டணி அவசியம் ஏற்பட்டால் திமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். ஜல்லிக் கட்டு, தமிழக மீனவர், வெள்ள நிவாரண பிரச்சினைகள் தொடர் பாக தமிழக முதல்வர் பிரத மரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க ஆக்கப்பூர்வமான நடவடிக் கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண தேர்லின்போது பாஜக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட்கூட பெற மாட்டார்கள் என்றார்.