தமிழகம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஜன.20 முதல் விருப்ப மனு: திமுக அறிவிப்பு

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் இம்மாதம் 20-ம் தேதி முதல்வ விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்போருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 20-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

இதில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விருப்ப மனுவை பூர்த்தி செய்து, வரும் 30-ம் தேதி அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் அளிக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதி விண்ணப்பம் ரூபாய் 25,000 எனவும், மகளிர் மற்றும் தனித்தொகுதி விண்ணப்பம் ரூபாய் 10,000 எனவும் அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT