கழிப்பறை வசதியை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்க, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள விவரம்:
இல்லந்தோறும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்க, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரம் மேலும் மேம்படுத்தப்படும்.
‘தூய்மைக் காவலர்களை’ நியமித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப் படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் திறன்மிகு தலைமை யின் கீழ், குப்பை இல்லாத தூய்மையான கிராமங்களையும், நகரங் களையும் இந்த அரசு உருவாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.