தமிழகம்

இறை வணக்க கூட்டத்தில் பிளஸ் 2 மாணவர் பலி

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் பாலமுருகன். இவர் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற பாலமுருகள் அங்கு நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே ஆசிரியர்கள் பாலமுருகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிதம்பரம் அரசு மருத்துமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலே பாலமுருகன் உயிரிழந் தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT