தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையராக இருந்த பெ.சீத்தாராமன் ஓய்வு பெற்றுள் ளார். புதிய ஆணையர் நியமிக்கப் படாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் உள்ளாட்சித் தேர் தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், திமுக வழக்கு தொடர்ந் தது. அதன்பின், இந்த வழக்கில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது. இதில், மே 14-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், மாற்றம் அமைப் பைச் சேர்ந்த பாடம் நாராயணன், ‘பஞ்சாயத் ராஜ் சட்டப்படி ஏப்ரல் 24-ம் தேதிக்குள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்க வேண் டும்’ என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணையின்போது, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரியது. ஆனால், ‘ மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமனின் பதவிக்காலம் கடந்த மார்ச் 22-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் நேற்று பொறுப்புகளை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டார். வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணிகள், இட ஒதுக்கீடுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையர் மேற்கொண்டு வந்தார். இப்பணிகளால்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசத்தை மாநில தேர்தல் ஆணையம் கோரி வந்தது. மாநில தேர்தல் ஆணையரின் ஓய்வால் அப்பணிகள் முழுமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தொடர்ந்து உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்நிலை யில், ஆணையரின் பதவிக்காலம் முடிவது தெரிந்தும் புதியவரை நியமிக்காதது தேர்தலை நடத்து வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.