தமிழகம்

அரசியலுக்கு வருவதும், வராததும் ரஜினியின் தனிப்பட்ட விருப்பம்: மு.க.ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் பகுதியில் உள்ள 2 கோயில் குளங்களை திமுகவினர் தூர்வாரி சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். அப்பணி களை நேற்று பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் நிருபர் களிடம் கூறியதாவது:

தமிழகமே தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, எனது வேண்டு கோளை ஏற்று தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை களை தூர்வாரும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசு தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பாளர்களை அப் புறப்படுத்த வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். இதுகுறித்து தனிப் பட்ட முறையில் கருத்துகூற விரும்பவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT